Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இணையும் இரு அணிகள் ; 5 அமைச்சர்களின் பதவி கல்தா? - ஓ.பி.எஸ் அணி தீவிரம்

Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (15:44 IST)

Widgets Magazine

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால், தினகரனுக்கு விசுவாசமாக இருந்த 5 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் எனத் தெரிகிறது.


 

 
தினகரனை கட்சியிலிருந்து விலக்குவது என அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் முடிவெடுத்து விட்டனர். தினகரனும் விலகிக் கொண்டார். தற்போது யாருக்கு முதல்வர் பதவி? யார் பொதுச்செயலாளர்? மற்றும் அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இரு அணிகளும் நாளை கூடி விவாதிக்க உள்ளனர். 
 
தினகரனை விலக்கி வைப்பது தவிர ஓ.பி.எஸ் அணிக்கு வேறு சில கோரிக்கைகளும் இருக்கின்றன. அதில் முதலாவது, ஓ.பி.எஸ்-ஸிற்கு முதல்வர் பதவி, அதேபோல் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவிகள் தர வேண்டும், முக்கியமாக தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, உடுமலை கிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் அணி மிகவும் தீவிரமாக இருக்கிறது. 
 
அவர்கள் இருப்பது நமக்கு சிக்கல்தான் என நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியில் இருக்கும் அந்த 5 அமைச்சர்களும், தற்போது ஓ.பி.எஸ் புகழ் பாட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும்; சொல்வது யார் தெரியுமா?

சசிகலா, டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுக என்பது இல்லை என முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் ...

news

தாடி மீசையுடன் ரோட்டில் ஜாலியாய் வளம் வரும் பெண்!!

நியூயார்க்கில் வசிக்கும் 24 வயது பெண்ணான அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ...

news

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: ஆளுநர் சந்திப்பின் பின்னணி!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ள நேரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ...

news

தினகரனுக்காக என்னை காறி துப்பினாலும் துடைத்துக்கொள்வேன் - நாஞ்சில் சம்பத்

தினகரனை புகழ்ந்து பேசுவதற்காக மக்கள் என்னை காறித் துப்பினாலும் அதை துடைத்துக் கொள்வேன் ...

Widgets Magazine Widgets Magazine