Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கட்டமைப்பு விஷயத்தில் அதிமுகவிட பாஜக, காங்கிரஸ் குறைவுதான். ப.சிதம்பரம்


sivalingam| Last Updated: திங்கள், 20 மார்ச் 2017 (18:03 IST)
சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்சியின் கட்டமைப்புதான். இந்த கட்டமைப்பு காங்கிரஸ் இடம் இல்லாததே தோல்விக்கு காரணம் என ப.,சிதம்பரம் கூறியுள்ளார்.


 


நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தக விழா ஒன்றில் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:  காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்புக்கு இணையாக இல்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பால், மக்களிடம் சிறப்பான முறையில் பிரசாரம் செய்து, அதிக ஓட்டுகளை பெற முடிகிறது. இருப்பினும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான, அ.தி.மு.க. ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், பா.ஜ.க.  ஆர்.எஸ்.எஸ்., கட்டமைப்பு சிறப்பானதாக இல்லை.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப, தேர்தல் வியூகத்தை வகுப்பது, 29 மடங்கு கடினமான செயல். தேசிய அளவில் தேர்தலை சந்திக்க, 29 வகையான வியூகங்களை அமைக்க வேண்டும் என, எங்கள் கட்சி தலைமையிடம் நான் இதுகுறித்து கூறியுள்ளேன்.


இதில் மேலும் படிக்கவும் :