வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (09:38 IST)

தமிழகம் - 2015: ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பின்னர் விடுவிக்கப்பட்டதால் 2015 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.


 

 
தமிழக முதலமைச்சராகவும் அதிமுக பொதுச்செயலாளராவும் இருந்த ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
 
இதனால், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பதவியை துறக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்லவம் பதவியேற்றார்.
 
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீனில் பெற்று வெளியே வந்தார்.
 
இந்நிலையில், இந்த வழக்கில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்புக்கு மாறாக ஜெயலலிதாவை விடுதலை செய்தும், அபராதத் தொகை ரூ.100 கோடியையும் தள்ளுபடி செய்தும், பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மே மாதம் 11 ஆம் தேதி உத்தரவிட்டார்.
 
இதனால், மீண்டும் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 2015 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.