வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2015 (16:53 IST)

தமிழகம் - 2015: உலக முதலீட்டாளர் மாநாடு

தமிழக அரசு சார்பில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.


 

 
செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடகிவைத்தார்.
 
இந்த மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கான முதலீடுகள் கிடைத்தது. இது 1991 முதல் 2011 வரையிலான 20 ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகளைப் போல இருமடங்கு என்று தெரிவிக்கப்பட்டது.
 
மாநாட்டில், 9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் பங்குபெற்றன. இதில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஒரே மாதிரியான தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், தென் மாவட்டங்களில் தொழில் முதலீட்டை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
 
 
சூரிய எரிசக்தி உற்பத்தி துறையில் மட்டும் ரூ.35 ஆயிரத்து 356 கோடிக்கான முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 5,345 மெகாவாட் மின்உற்பத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


இந்த முதலீடுகள் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு கூறியது.
 
இதேபோன்ற மாநாடு, 2 ஆண்டுக்கு ஒருமுறை  தமிழகத்தில் நடத்தப்படும் என்றும், அடுத்த மாநாடு 2017 ஆம் ஆண்டு நடத்தப் படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக மாநாட்டு நிறைவுரையில் கூறினார்.