வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2015 (11:03 IST)

தமிழகம் - 2015: மது ஒழிப்பிற்காகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாள் மரணம்

மது ஒழிப்பிற்காகப் போராடிய காந்தியவாதி சசி பொருமாள் 2015 ஆம் ஜூலை 31ஆம் தேதி உயிரிழந்தார்.


 

 
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசி பெருமாள். அவர் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைகடை பகுதியில் 2015 ஆம் ஜூலை 31ஆம் தேதி, 130 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.
 
அவர், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றும் வரையில் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறிவந்தார். பின்னர் அவரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் செல்போன் டவரில் இருந்து கயிறு மூலம் கீழே இறக்கினர்.
 
கீழே கொண்டுவரப்பட்ட அவரது உடலில் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சசி பெருமாள் இறந்துவிட்தாக மருத்துவர்கள் கூறினர்.
 
சசி பெருமாளின் மரணம் குறித்த தொடரப்பட்ட வழக்கில், கழுத்தில் கயிறு இறுகி தூக்கில் தொங்கியதால்தான் மதுவிலக்கு போராளி சசிபெருமாள் மரணமடைந்தார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
 
ஆனால், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினரும் சசி பெருமாளை கயிறு மூலம் இறக்கிய போதுதான் அவர் உயிரிழந்தார் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாற்றினர்.
 
மேலும், காவல் துறையினரோ, அரசினரோ விரைவில் சசி பெருமாளோடு பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் ஒப்புதல் அளித்திருந்தால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.