வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (11:57 IST)

2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் - அதிக ரன் குவித்தவர்கள் அதிரடி வீரர்கள்

அதிக ரன் குவித்தவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
2015ஆம் ஆண்டை பொறுத்தவரை நியூசிலாந்தின் வில்லியம்சன் 26 போட்டிகளில் [25 இன்னிங்ஸ்] விளையாடி, 3 சதங்கள், 8 அரைச் சதங்கள் உட்பட 1317 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
 

 
நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 29 போட்டிகளில் விளையாடி [29 இன்னிங்ஸ்] 4 சதங்கள், 6 அரைச் சதங்கள் உட்பட 1287 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 20 போட்டிகளில் விளையாடி [18 இன்னிங்ஸ்] 1193 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதில் 5 சதங்களும், 5 அரைச் சதங்களும் அடங்கும்.
 
இலங்கை வீரர் தில்ஷன் 1100 ரன்களுடன் நான்காவது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 1062 ரன்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
அதிக ரன் குவித்தவர்கள் [டெஸ்ட் போட்டி] :
 
2015ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் 13 போட்டிகளில் [24 இன்னிங்ஸ்] விளையாடி, 3 சதங்கள், 8 அரைச் சதங்கள் உட்பட 1357 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
 

 
இங்கிலாந்தின் ஜோ ரூட் 13 போட்டிகளில் விளையாடி [24 இன்னிங்ஸ்] 3 சதங்கள், 9 அரைச் சதங்கள் உட்பட 1288 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 12 போட்டிகளில் விளையாடி [22 இன்னிங்ஸ்] 1277 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதில் 4 சதங்களும், 7 அரைச்சதங்களும் அடங்கும்.
 
ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவன் ஸ்மித் 1270 ரன்களுடன் நான்காவது இடத்தையும், நியூசிலாந்து வீரர் கனே வில்லியம்சன் 1172 ரன்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.