1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (19:18 IST)

டி வில்லியர்ஸ், மெக்கல்லம் 2015இல் அதிக சிக்ஸர்கள் விளாசல்

அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
2015ஆம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 58 சிக்ஸர்கள் [20 போட்டிகள்] விளாசி முதலிடத்தில் உள்ளார்.
 
 

 
 
நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 32 சிக்ஸர்கள் [22 போட்டிகள்] அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் இயான் மோர்கன் 30 சிக்ஸர்கள் [20 போட்டிகள்] அடித்து 3ஆவது இடத்தில் உள்ளார்.,
 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் [11 போட்டிகள்] மற்றும் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் [29 போட்டிகள்] ஆகியோர் தலா 29 சிக்ஸர்கள் விளாசி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
 
இந்தியாவின் ரோஹித் சர்மா 23 சிக்ஸர்கள் [17 போட்டிகள்] இரண்டாம் இடத்தில் உள்ளார்
 
அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
2015ஆம் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் மிஸ்பா உல்-ஹக் 20 சிக்ஸர்கள் [8 போட்டிகள், 14 இன்னிங்ஸ்கள்] விளாசி முதலிடத்தை பிடித்துள்ளார்.
 

 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெர்மைன் பிளாக்வுட் 12 சிக்ஸர்கள் [9 போட்டிகள், 18 இன்னிங்ஸ்கள்] இரண்டாம் இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் மலிந்த ஸ்ரீவர்தனா [4 போட்டிகள், 7 இன்னிங்ஸ்கள்] மற்றும் ஆஸ்திரேலியாவியின் டேவிட் வார்னர் [12 போட்டிகள், 22 இன்னிங்ஸ்கள்] ஆகியோர் தலா 11 சிக்ஸர்கள் விளாசி 3ஆவது இடத்தில் உள்ளார்.,
 
பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் [7 போட்டிகள், 13 இன்னிங்ஸ்கள்] மற்றும் இந்தியாவின் ரோஹித் சர்மா [7 போட்டிகள், 13 இன்னிங்ஸ்கள் ஆகியோர் தலா 10 சிக்ஸர்கள் விளாசி 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.