அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1 கோடி?


Abimukatheesh| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (16:57 IST)
அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா தொடர்ந்து முதல்வராக வேண்டும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்களை அமைதிப்படுத்த பொங்கல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 
இதையடுத்து அவர் தமிழக முதல்வராக வேண்டும் துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தினார். இதற்கும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் ஒருசில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அமைதிப்படுத்தவும், அவர்களை வேறு கட்சிக்கு செல்லாமல் தடுக்கவும் பொங்கல் பரிசாக அதிமுகவின் 136 எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ.1 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ஆனால் இந்த தகவல் குறித்து அதிமுக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :