அன்னா ஹசாரே திடீர் உடல் நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி


Murugan| Last Updated: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (12:29 IST)
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே, திடீரென ஏற்பட்ட நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 
அன்னா ஹசாரேவுக்கு வயது 78. அவர் தற்போது அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வருகிறார்.
 
தனது வீட்டிலிருந்த அவருக்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதிக வெயில் காரணமாக, உடலில் வெப்பம் அதிகரித்து அவர் பாதிப்பு அடைந்திருக்கலாம் என தெரிகிறது.
 
அதையடுத்து, அஹமது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
 
அவருக்கு சிறுநீரகம் மற்றும் வயிற்று கோளாறு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், பூரண ஓய்வுக்குபின் அவர் குணமடைந்து விடுவார் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :