நான் சொன்னது சரிதானே? டுவிட்டரில் குஷ்பு!

Webdunia|
FILE
திருமணமாகாவிட்டாலும் ஒரு ஆணும் பெண்ணும் பாலுறவு கொண்டு குழந்தையும் பெற்றுக் கொண்டால் அவர்கள் கணவன் -மனைவியாகவே கருதப்படுவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் பரபரப்பு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிரொலித்து, நான் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை உயர்நீதிமன்றம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றிய எனது கருத்து நிரூபணமாகியுள்ளது.

இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு போராட்டம் செய்கிறார்களா என்பதைக் காண ஆவலாகக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
உண்மைதான் அம்மணி அன்று சொன்னது உண்மைதானே!


இதில் மேலும் படிக்கவும் :