காவல்துறை போல நடித்து மூதாட்டியிடம் நகை கொள்ளை

Webdunia|
FILE
காவல்துறையினர் போல வந்து, உதவுவது போல நடித்து, மூதாட்டியிடம் 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வாடியான்பேட்டை அருகே உள்தெருவில் 68 வயதாகும் ஓய்வு பெற்ற ஆசிரியையான புவனேஸ்வரி வசித்து வருகிறார். இவர், இன்று காலை இட்லி மாவு வாங்குவதற்காக வெளியில் சென்றார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மூதாட்டியிடம், இந்தப்பகுதியில் இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும், மக்கள் பரபரப்பாக இருப்பதாலும், காவல்துறையினராகிய தாங்கள் அங்கே சோதனை நடத்திவிட்டு, குற்றவாளிகளை தேடிக் கொண்டு செல்வதாகவும், எனவே நீங்கள் உங்களுடைய நகையைக் கழற்றி, ஒரு பேப்பரில் சுற்றி பையில் போட்டுக் கொள்ளவும் என்றும் கூறியுள்ளனர்.
அவ்வாறு அந்த மூதாட்டி செய்தவுடன், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், காவல் நிலையத்தில் வந்து நகையை வாங்கிக் கொள், நாங்கள் முன்னே செல்கிறோம் என்றும் கூறி, அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.

நேரம் ஆனவுடன் தான் ஏமாற்றப்பட்டதையும் தன்னிடம் இருந்து நகையைப் பறிக்கவே இவர்கள் திட்டம் தீட்டியதையும் கண்டு புவனேஸ்வரி காவல்துறையில் புகார் அளித்தார். இதனை விருதுநகர் மேற்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :